’கிளிமஞ்சரோ’ பாடலின் படப்பிடிப்பு பகுதியில் நிலச்சரிவு - துண்டிப்பான பாதைகள்!

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பெரு நாட்டில் அமைந்திருக்கும் மச்சு பிச்சுவிற்கு செல்ல அந்நாட்டு அரசானது தடை விதித்துள்ளது.

’கிளிமஞ்சரோ’ பாடலின் படப்பிடிப்பு பகுதியில் நிலச்சரிவு - துண்டிப்பான பாதைகள்!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு மழைக்காடுகள் மற்றும் மலைப்பகுதிகளை அதிக அளவில் கொண்டதாக திகழ்கிறது. அதில் அமைந்திருக்கும் மச்சு பிச்சு என்ற 15 ஆ நூற்றாண்டுகளில் உருவாக்கப்பட்ட மலை நகரமானது புகழ் பெற்று இருந்து வருகிறது. இதனை காண்பதற்காக உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் பெரு நாட்டிற்கு வருகை தருவதாக சொல்கின்றனர்.

தமிழ் சினிமாவில் சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளிவந்த எந்திரன் திரைப்படத்தில் முதல் முறையாக இந்த மச்சு பிச்சு மலைகள் இடம்பெற்றதாக சொல்லப்படுகிறது. அத்திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் கிளிமஞ்டரோ பாடல் இந்த இடத்தில் தான் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்த மலைப்பகுதியில் ஏற்ப்பட்ட பெருமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மச்சு பிச்சு பகுதியின் மலை பாதையான செல்லும் வழிகள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இதனின் பலப்பகுதிகள் வெள்ளம் காரணமாக சேதமடைந்து உள்ளதாகவும் குடியிருப்பு பகுதிகள் சேற்றில் மூழ்கி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் அங்குள்ள அல்கமேயோ ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மச்சு பிச்சு பகுதிக்கு செல்லும் சாலைகள் மற்றும் ரெயில் பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனை தொடர்ந்து மச்சு பிச்சு செல்வதற்கு காலவரையற்ற தடை விதிக்கப்படுவதாக பெரு அரசு அறிவித்துள்ளது.