இலங்கையின் புதிய அதிபர் யார்?  : நெருக்கடியான சூழலில் இன்று அதிபர் பதவிக்கான தேர்தல்  !!

இலங்கை அதிபராக யார் பதவியேற்றாலும் பிரதமர் மோடி உதவ வேண்டும்

இலங்கையின் புதிய அதிபர் யார்?  : நெருக்கடியான சூழலில் இன்று அதிபர் பதவிக்கான தேர்தல்  !!

மிகவும் நெருக்கடியான சூழலில் இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இலங்கை பொருளாதாரம்

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில், பொதுமக்களின் தொடர் போராட்டம் காரணமாக நாட்டை விட்டு ஓடிய கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமிசிங்கே பொறுப்பேற்றார். ஆனால், அவரும் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

அதிபர் தேர்தல்

இந்நிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில், தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அனுராகுமார திசநாயக, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்த டலஸ் அழகப்பெருமாள் ஆகியோர் போட்டியிடுவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது. 

பிரேமதாசா விலகல்

இதனிடையே, அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, இலங்கை அதிபராக யார் பதவியேற்றாலும், கருத்து வேறுபாடின்றி அவர்களுக்கு இந்திய பிரதமர் மோடியும், பிற இந்திய அரசியல் கட்சி தலைவர்களும் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.