தமிழர் பிரச்சனைகளை பிரதமர் மோடியிடம் கூறக்கூடாது - எம்.பி.க்களுக்கு மந்திரி வலியுறுத்தல்!

இலங்கை இறையாண்மை கொண்ட ஒரு தனி நாடு இந்திய ஒன்றித்தின் ஒரு பகுதியாக குறிப்பிட முடியாது என தெரிவித்துள்ளனர்.

தமிழர் பிரச்சனைகளை பிரதமர் மோடியிடம் கூறக்கூடாது - எம்.பி.க்களுக்கு மந்திரி வலியுறுத்தல்!

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பரவலை அளிக்கும் 13 வது சட்டத்திருத்ததை அமலுக்கு கொண்டு வருமாறு அரசிடம் வலியுறுத்தக் கோரியும் நீண்ட காலமாக நீடித்து வரும் தமிழர் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு காண உதவி செய்யக் கோரியும் பிரதமர் மோடிக்கு இலங்கை தமிழ் எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இதை  இலங்கை அரசு கண்டித்து கேபினட் இணை செய்தியாளருமான, மந்திரியுமான உதய கம்மன்பிலா செய்தியாளர்களிடம் கூறுகையில் நமது தமிழ் கட்சிகளுக்கு எதாவது பிரச்சனையோ அல்லது கவலையோ இருந்தால் அதனை நமது அதிபரான கோத்தபய ராஜபக்சேவிடம் தெரிவிக்க வேண்டும் .இதனை இந்திய பிரதமரிடம் தெரிவிக்க வேண்டியது தேவை இல்லை எனவும் ஏனென்றால் இலங்கை இறையாண்மை கொண்ட ஒரு தனி நாடு, இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதி அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.