ஐரோப்பிய நாடுகளுக்கு தரைக்கடல் வழியாக புலம் பெயர முயன்ற 600 க்கும் மேற்பட்டோர் மாயம் - சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு தகவல்..

மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர முயன்ற 600க்கு மேற்பட்டோர் மாயமானதாக சர்வதேச புலம்பெயர்வோர் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கு தரைக்கடல் வழியாக புலம் பெயர முயன்ற 600 க்கும் மேற்பட்டோர் மாயம் - சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு தகவல்..

கடும் பொருளாதார நெருக்கடி நிலை, வாழ்வதற்கு வசதியற்ற சூழலை கருத்தில் கொண்டு துனிஷியா, லிபியா உள்ளிட்ட சிறிய நாடுகளிலிருந்து ஏராளமானோர் அவ்வப்போது அகதிகளாக சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில் மத்திய தரைக்கடல் வழியாக படகுகளில் பெருங்கூட்டமாக வருவோர் நடுக்கடலில் அமிழ்ந்து போகும் நிலை காணப்படுகிறது. இந்தநிலையில் நடப்பாண்டு முதல் 3 மாதங்களில் புலம் பெயர முயன்றவர்களில் 600 பேர் கரை திரும்பவில்லை எனவும், இது 2014ம் ஆண்டை ஒப்பிடுகையில் அதிகம் எனவும் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு கூறியுள்ளது.

குறிப்பாக கடந்த செவ்வாய் கிழமை துனிஷியாவிலிருந்து படகில் வந்த 100 பேரில் 25 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.