ஒரே வாரத்தில் 72 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு : அமெரிக்காவில் அதிர்ச்சி ரிப்போர்ட்!!

அமெரிக்காவில் கடந்த ஒரே வாரத்தில் 72 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி.

ஒரே வாரத்தில் 72 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு : அமெரிக்காவில் அதிர்ச்சி ரிப்போர்ட்!!

அமெரிக்காவில் கடந்த ஒரே வாரத்தில் மொத்தம் 72 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 கோடியை கடந்துள்ளது. கடந்த ஒரே வாரத்தில் 72 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிர தொற்று பாதிப்புக்கு கடந்த வாரத்தில் மட்டும் 15 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. பரவலை கட்டுப்படுத்த அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையிலும் பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.