இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து  வங்காள விரிகுடாவில் மேற்கொள்ளும் கடற்படை கூட்டுப்பயிற்சி...

வங்காள விரிகுடாவில் கடற்படை கூட்டுப்பயிற்சி முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து  வங்காள விரிகுடாவில் மேற்கொள்ளும் கடற்படை கூட்டுப்பயிற்சி...

இந்திய ஜப்பான் ஆகிய இரு  நாடுகளின் கடற்படைகள் இணைந்து கூட்டு பயிற்சி முகாமில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.போர் காலங்களில் எதிரிநாட்டு வீரர்களை சமாளிப்பது விமானத்தில் பறப்பது போன்றவைக்கான பயிற்சிகள் மேற்கொள்ளபட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்திய போர்க்கப்பலான சிவாலிக்  காட்மண்டு, ஜப்பானிய போர்க் கப்பலான உராகா மற்றும் ஹிராடோ ஆகிய கப்பல்களுடன் இணைந்து வங்காள விரிகுடாவில் நேற்று இந்த பயிற்சியை மேற்கொண்டனர். இதுகுறித்து இந்திய கப்பற்படை தனது சமூக வலைதளப்பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளது.

ஜப்பான் மற்றும் இந்தியா என இரு நாடுகளும் பல ஆண்டு காலமாக நட்பு நாடுகளாக இருந்து வருவதாகவும், மேலும் இரு நாடுகளுக்கிடையில் பொருளாதார சம்மந்தப்பட்ட ஒப்பதங்களும் இடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.இந்நிலையில் இரு நாடுகளிடையே பாதுகாப்பு, அமைதி ஆகியவற்றை பலப்படுத்தும் நோக்கில் இந்த கூட்டுப் பயிற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.