என்னது பூஸ்டர் டோஸா? முதல் டோஸுக்கே இங்க வழியில்லப்பா!

கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் தேவையா? என்பது குறித்து தற்போதைக்கு பரிந்துரைக்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பல நாடுகளில் அதீத வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் பிறழ்வுகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை போடுவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் குறித்த பரிந்துரையை தற்போதைக்கு வெளியிட முடியாது எனவும் பூஸ்டர் டோஸ் தேவையா இல்லையா? என்பது குறித்த தரவுகள் தங்களிடம் இல்லை எனவும் கூறினார். பெரும்பாலான நாடுகளில் இன்னும் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தும் பணியே நிறைவடையவில்லை என குறிப்பிட்ட அவர், பூஸ்டர் டோஸ் குறித்து ஆராய இது நேரமில்லை எனவும் கூறினார்.