புதிதாக உருவெடுத்த ஒமிக்ரான் வைரஸ்... தாக்கத்தை கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள்...

புதிய ரக வைரஸ் தாக்கத்தைக் கண்டறியும் வரை மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிட வேண்டாம் என்று உலக சுகாதார விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

புதிதாக உருவெடுத்த ஒமிக்ரான் வைரஸ்... தாக்கத்தை கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள்...

தென்னாப்பிரிக்கா நாட்டில் புதிதாக உருவெடுத்து இருக்கும் B1.1.529 ரக வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தற்போது தென் ஆப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதை கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய வைரசுக்கு கிரேக்க பெயர் சூட்டப்படும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், அதிக வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரசுக்கு கிரேக்க எழுத்தான ஒமிக்ரான் என விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.

இதற்கிடையே ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பு அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இந்தக் கூட்டத்தில் புதிய ரக வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த புதிய வகை வைரசுக்கு ஏகப்பட்ட திரிபு நிலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. புதிய ரக வைரஸ் எவ்வாறு திரிந்து பரவுகிறது என்பதைப் பொறுத்தே இதன் தன்மை விஞ்ஞானிகளால் கண்டறியப்படும். தென்னாபிரிக்காவில் குறைவான முன் களப்பணியாளர்களுக்கு மட்டுமே 2 டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தக் கூட்டத்தை அடுத்து அடுத்த வாரமும் உலக சுகாதார அமைப்பின் முக்கிய கூட்டத்தை நடத்த உள்ளனர். அதே சமயத்தில் இந்த புதிய ரக வைரஸ் தாக்கத்தைக் கண்டறியும் வரை மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிட வேண்டாம் என்று உலக சுகாதார விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.