சிக்னல் இல்ல.. ரஷ்யா தான் தாக்கியிருக்க வேண்டும் - சர்வதேச அணுசக்தி முகமை தலைவர் எச்சரிக்கை

உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பின் சிக்னல் தொலைந்துவிட்டதாக சர்வதேச அணுசக்தி முகமைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

சிக்னல் இல்ல.. ரஷ்யா தான் தாக்கியிருக்க வேண்டும் - சர்வதேச அணுசக்தி முகமை தலைவர் எச்சரிக்கை

உக்ரைனின் ப்ரிப்யாத் என்னும் பகுதியில் அமைந்துள்ளது செர்னோபில் அணுமின் நிலையம். கடந்த 1986 ஆம் ஆண்டு செர்னோபில் அணுமின் நிலைய விபத்து, உலக வரலாற்றில் மிக மோசமான அணு உலை விபத்தாக பதிவானது.

இந்த நிலையில் தற்போது உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்ய படை அங்குள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேறும் கதிர்வீச்சின் அளவு அதிகரித்து வருவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது. மேலும்  செர்னோபில் அணுமின் நிலையம் வெடித்து சிதறினால் அதிக ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் செர்னோபில் அணுமின் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகளிலிருந்து வரும் சிக்னல்கள் தொலைந்துவிட்டதாக சர்வதேச அணுசக்தி முகமைத் தலைவர் ரஃபேல் க்ரோஸி தெரிவித்துள்ளார். இதனால் செர்னோபில் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்த தகவல்களை இனி இந்த அமைப்பு ஐ.நா அனுமின் நிலைய கண்காணிப்பாளருக்கு அனுப்பாது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் விபத்து ஏற்படக்கூடிய ஆபத்து உருவாகியிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.