எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார்... வைரலாகும் வடகொரிய அதிபரின் வீடியோ...

மெலிந்த தோற்றத்துடன் காணப்படும் வட கொரிய அதிபர் 

எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார்... வைரலாகும் வடகொரிய அதிபரின் வீடியோ...
உடல் எடை குறைத்து மெலிந்து காணப்படும்  வட கொரிய அதிபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வடகொரிய அதிபர் என்ற உடனேயே நம் நினைவுக்கு வருவது கொழு கொழு கண்ணங்கள் மற்றும் குண்டான உடல் வாகு கொண்ட வெள்ளை மனிதர் தான். கள்ளம் கபடமே இல்லாத அவரின் குழந்தை சிரிப்பு பார்ப்பவரை கவரும். இந்த குழந்தை முகத்துக்கு சொந்தக்காரர் அமெரிக்காவுக்கே சிம்ம சொப்பணமான விளங்கியவர் என்பதை நம்மால் மறுக்க முடியாது.  
இந்த நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சற்றே உடல் மெலிந்து காணப்படுகிறார். அவர் உணவு கட்டுப்பாடுகளின் மூலம் உடல் எடையை குறைத்திருக்க கூடும் என பலரும் கருத்து கூறி வருகின்றனர். சமீபத்தில் வடகொரியாவில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உடல் மெலிந்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.