மக்கள் முகக்கவசம் அணிய தேவை இல்லை - இங்கிலாந்தில் அறிவிப்பு!

இங்கிலாந்தில் கடந்த மாதம் அதிகரித்த ஒமைக்ரான் தற்போது குறைந்த நிலையில் ஊரடங்கை கைவிட முடிவு செய்து மக்கள் யாவரும் இனி முகக்கவசம் அணிய தேவை இல்லை என அறிவித்துள்ளது.

மக்கள் முகக்கவசம் அணிய தேவை இல்லை - இங்கிலாந்தில் அறிவிப்பு!

இங்கிலாந்தில் கடந்த மாதம் அதிகரித்த கொரோனா தொற்று காரணமாக ஒமைக்ரானுக்கு எதிராக திட்டம் பி யை அரசு செயல்படுத்த தொடங்கியது.இதன்படி நாட்டு மக்களுக்கு முகக்கவசம் கட்டாயம் மற்றும் வீட்டில் இருந்த படி வேலை, உணவகங்கள் மதுக்கடைகள் போன்ற அனைத்தும்  மூடப்பட்டு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது.

இதனிடையில் தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் அதனை கருத்தில் கொண்டு அடுத்த வாரம் அதாவது வருகிற 26 ஆம் தேதியன்று திட்டம் பி யை அரசு கைவிடுவதாக தெரிவித்துள்ளது.இதனை தொடர்ந்து வரும் 27 ஆம் தேதி முதல் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அறிவித்துள்ளது.உயர்நிலை பள்ளிகளில் பயிலும் மாணக்கார்களுக்கு நேற்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்போல வீட்டில் இருந்து பணி செய்வது ரத்து செய்யப்படுகிறது. ஓட்டல்கள், விடுதிகள், பார்கள், உணவகங்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் நுழைய தடுப்பூசி சான்றிதழோ அல்லது கொரோனா இல்லை என்ற சான்றிதழோ கட்டாயம் அல்ல என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து உள்ளார்.அதேநேரம் தொற்று பாதித்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கின்றனர்.