மின்னல் வேகத்தில் பரவுகிறது ஒமிக்ரான்... ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை...

ஓமிக்ரான் கொரோனாவின் தீவிர தன்மை குறித்து அமெரிக்கா ஆய்வாளர்கள் ஆண்டனி பவுசி சில முக்கிய தரவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

மின்னல் வேகத்தில் பரவுகிறது ஒமிக்ரான்... ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை...

தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு பல்வேறு நாடுகளுக்கும் பரவ தொடங்கிவிட்டது. இதுவரை குறைந்தபட்சம் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்தியாவிலும் இதுவரை 21 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, ஓமிக்ரான் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. 

ஓமிக்ரான் இந்த உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டு வெறும் சில நாட்களே ஆகும் நிலையில், இது என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்த தெளிவான தரவுகள் இல்லை. தென் ஆப்பிரிக்காவில் இதுவரை இந்த உருமாறிய கொரோனா லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் முன்னெச்சரிக்கையாக உலக சுகாதார அமைப்பு இந்த கொரோனாவை கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. மின்னல் வேகத்தில் பரவுகிறது இந்தச் சூழலில் அமெரிக்கத் தேசிய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைவர் ஆண்டனி பவுசி கூறுகையில், "தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில மாதங்களாக வைரஸ் பாதிப்பு குறைவாகவே இருந்தது. ஆனால், ஓமிக்ரான் கண்டறியப்பட்ட பின்னர் அங்கு வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்துள்ளது. இது ஓமிக்ரான் எந்தளவு வேகமாகப் பரவுகிறது என்பதைக் காட்டுகிறது.

எனவே, நாம் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், பொறுப்பாக இருங்கள் அதேநேரம் தற்போது வரை நம்மிடம் உள்ள தரவுகளை வைத்துப் பார்க்கும்போது இந்த வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. இது ஒரு நல்ல விஷயம்" என்று அவர் குறிப்பிட்டார். அதேபோல இந்த ஓமிக்ரான் உருமாறிய கொரோனா தற்போது நம்மிடம் உள்ள தடுப்பூசிகளில் இருந்து தப்பும் ஆற்றலைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை என்றும் நாம் சற்று பொறுப்பாக இருக்கும் நேரம் இது என்றும் அவர் தெரிவித்தார். 

தீவிர தன்மை தென் ஆப்பிரிக்காவில் இதுவரை பெரும்பாலும் இந்த வைரஸ் இளைஞர்கள் மத்தியில் தான் அதிகம் பரவியுள்ளது. எனவே, இதன் தீவிர தன்மை குறித்து துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை என்றும் வரும் காலத்தில் முதியவர்களுக்கும் இந்த உருமாறிய பரல் ஏற்படும் போது தான் இதன் தீவிர தன்மையைச் சரியாகக் கூற முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.