உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர - ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசிய பொழுது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். 

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர - ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

இதனை தொடர்ந்து பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினும் சர்வதேச அளவில் உணவு தானியங்கள் மற்றும் உரங்கள், எரிபொருள்கள் போன்றவற்றிற்கு நிலவும் பற்றாக்குறைகள் குறித்தும் ஆலோசித்து உள்ளனர். 

நேட்டோவில் இணைய முயன்ற உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலை தொடங்கியது மேலும் உக்ரைனின் சில முக்கிய நகரங்களை குறி வைத்தும் தாக்குதல் தொடரப்பட்டன. இந்த இரு நாடுகளுக்கும் இடையே உருவான போர் ஆனது 128 நாட்களை கடந்தும் நீடித்து வந்தது. இப்போரில் இதுவரை மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைனை சார்ந்த மக்கள் உயிரிழந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த போரில் சுமார் 30 ஆயிரம் உக்ரைனின் ராணுவ வீரர்கள் மட்டும் சுட்டுக்கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.  

இந்த போரின் காரணமாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை விதித்து வந்தது. இந்த உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தில் நடுநிலை வகித்து வரும் இந்தியா இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான தீரை எட்டி போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வந்தது. 

மேலும் இது தொடர்பாக பிரதமர் மோடி ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் பலமுறை தொலைபேசி மூலம் சமரச பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். போரின் அச்சுறுத்தல் காரணமாக உக்ரைனில் சிக்கிதவித்த இந்தியர்கள் சுமார் 20 ஆயிரம் பேரை மத்திய அரசு பத்திரமாக மீட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. 

போர் நிற்காது தொடர்ந்து வரும் நிலையில் நேற்று புதினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட் பிரதமர் அரசு ரீதியான பேச்சுவார்த்தை மூலம் உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார் மேலும் சர்வதேச உணவு தானியங்களின் பற்றாக்குறை குறைத்தும் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தெரிகிறது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்த புதினிடம் உணவு தானியங்கள் மற்றும் உரங்கள் , மருந்துகள் தொடர்பான ஏற்றுமதி இறக்குமதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் மோடி. இதில் எட்டப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்த இரு தலைவர்களும் அலோசித்ததாக சொல்லப்படுகிறது. 

இதனை தொடர்ந்து ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் இந்தியாவுக்கு தேவையான எரிசக்தி, உரங்கள் மற்றும் உனவு தானியங்கள் போன்றவற்றை ரஷ்யா தொடர்ந்து வழங்கும் என்றார், மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்த நாடுகள் மட்டும் தங்களது தவறுகளை விரைவில் உணரும் என்ற அவர் பொருளாதார தடை காரணமாகவே சர்வதேச சந்தையில் எரிபொருள் உணவு தானியங்கள் போன்றவற்றின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவித்தார்.