ஜி-7 மாநாட்டில் இன்று பிரதமர் பங்கேற்பு : 12 நாட்டு தலைவர்களை சந்திக்கிறார் !!

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனி புறப்பட்டுச் சென்றார்.

ஜி-7 மாநாட்டில் இன்று பிரதமர் பங்கேற்பு : 12 நாட்டு தலைவர்களை சந்திக்கிறார் !!

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள 'ஜி-7' அமைப்பின் உச்சி மாநாடு, ஜெர்மனியின் ஸ்குலோஸ் எல்மாவ் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. 

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு ஜெர்மனி பிரதமர் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, 'ஜி-7' உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனி புறப்பட்டுச் சென்றார். 

ஜி-7 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட 12 நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பேச உள்ளார்.  

உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாளை மறுதினம் ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.  அங்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபரும், அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ஜாயெத் அல் நஹ்யானை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பை முடித்துக்கொண்டு நாளை மறுதினம் இரவு அவர் டெல்லிக்கு புறப்படுகிறார்.