பாகிஸ்தான்: கனமழையால் உயிரிழந்த 1,500 பேர்.. ரூ.180கோடி கடன் வழங்க முன்வந்த உலக வங்கி..!

உணவு தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி சூழலில் சிக்கியுள்ள பாகிஸ்தான்..!

பாகிஸ்தான்: கனமழையால் உயிரிழந்த 1,500 பேர்.. ரூ.180கோடி கடன் வழங்க முன்வந்த உலக வங்கி..!

பாகிஸ்தானில் வெளுத்து வாங்கிய மழை:

பாகிஸ்தான் விவசாயிகளின் மறுவாழ்வுக்கென 22 புள்ளி 2 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது. பாகிஸ்தானில் அண்மையில் பெய்த கனமழையில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

உதவுமாறு கோரிக்கை:

மேலும் சுமார் 78,000 சதுர கிலோ மீட்டரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன.  இதனால் அங்கு உணவு தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், பணக்காரர்கள் மற்றும் நட்பு நாடுகள் உதவ பாகிஸ்தான் அதிபர் ஷெபாஸ் ஷெரிப் கேட்டிருந்தார். 

ரூ.180கோடி கடன்:

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மறுவாழ்வுக்காக பாகிஸ்தானுக்கு 22 புள்ளி 2 மில்லியன் டாலர் அதாவது இந்தியா மதிப்பில் சுமார் 180 கோடி ரூபாயை கடனாக வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது.