பாலியல் குற்றங்களுக்கு காரணம்... பாகிஸ்தான் பிரதமர் சர்ச்சை கருத்து..
பாலியல் குற்றங்களுக்கு காரணம் பெண்கள் அணியும் ஆடையே காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.

எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் மேற்கொண்ட சமரச பேச்சுவார்த்தையின் பலனாக இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் ஏழு நாட்கள் நிறுத்தப்பட்டது.
மனிதாபமான நடவடிக்கைகளுக்காக எடுக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் படி இருதரப்பும் தங்கள் பிடியில் உள்ள பணயக் கைதிகளை விடுவித்து வருகின்றன. இதன் மூலம் காசாவிற்கு மேலும் சில மனிதாபமான உதவிகளும் கிடைத்துள்ளன.
இந்நிலையில், தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த இஸ்ரேல் பணயக் கைதிகளில் பிரெஞ்சு நாட்டுப் பெண் உட்பட 8 பேரை ஹமாஸ் விடுவித்துள்ளது.
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த 21 வயதான மியா செம் என்ற இளம்பெண்ணும் அமித் சௌசானா என்ற பெண்மணியும் விடுவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மற்ற ஆறு பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் அனைவரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இஸ்ரேல் விடுவித்த பாலஸ்தீன குடிமக்கள் வெஸ்ட் பேங்கின் ஆபர் சிறையிலிருந்து பேருந்தில் புறப்பட்டுச் சென்றனர். அவர்களுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளும் சென்றனர்.
4 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் நேரடி விமான சேவையை இயக்கி வந்தது. அந்த விமான சேவைகள் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து சகஜ நிலை திரும்பிய பின் சென்னையில் இருந்து பல நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டன. ஆனால் ஹாங்காங், ஜித்தா உள்பட பல நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்காமல் இருந்து வந்தது.
சென்னையில் இருந்து ஜப்பான், தென் கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு ஹாங்காங் விமான நிலையம் இணைப்பு விமான நிலையமாக இருப்பதால் ஹாங்காங்கிற்கு நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பின், வரும் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ந் தேதியில் இருந்து கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீண்டும் ஹாங்காங்- சென்னை இடையே நேரடி விமான சேவையை தொடங்குகிறது. இந்த விமான சேவை வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஹாங்காங் நேரடி விமான சேவை 4 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் தொடங்கப்பட உள்ளதால் தொழில் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வர வேண்டுமென அந்நாட்டின் ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல் வலியுறுத்தியுள்ளார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கே.எஸ்.ஜி கல்லூரியில் இளைஞர்களின் வளர்ச்சி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பப்புவா நியூ கினியா நாட்டின் மேற்கு நியூ பிரிட்டனின் ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல், மற்றும் அந்நாட்டின் வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபு கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல், "பப்புவா நியூ கினியா நாட்டில் பல கல்லூரிகள் உள்ளது. ஆனால் அங்கு அரசாங்கத்தால் மட்டுமே நடத்தப்படும் கல்லூரிகள் உள்ளன. இந்தியாவில் உள்ளது போல் அங்கு இல்லை. இந்தியாவில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளை அங்கு அழைத்து கொண்டிருக்கிறோம். அந்த நாட்டில் தொடங்க நிறைய வாய்ப்பு உள்ளது. இங்கு உள்ளவர்களுக்கு வியாபாரமாகவும் இருக்கும். எங்கள் நாடு ஆஸ்திரியாவில் இருந்து விடுதலை பெற்ற நாடு" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர்கள், "இந்தியாவுக்கும் பப்புவா நாட்டிற்கும் 80லிருந்தே உறவுகள் உள்ளது. அங்கு கனிம வளம், விவசாயம் சம்மந்தபட்டதும் அதிகம் உள்ளது. சாட்டிலைட் தொடர்பாக இந்தியாவிலிருந்து பப்புவா நாட்டிற்கு வரும் 25 ஆம் தேதி இஸ்ரோ குழுவினர்கள் வருகிறார்கள்" எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியா - வங்கதேசம் இடையே நாடு விட்டு நாடு செல்லும் ரயில் சேவைத் திட்டத்தை இருநாட்டு பிரதமா்கள் இன்று தொடங்கி வைக்கவுள்ளனர்.
15 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்தியாவின் அகர்தலா முதல் வங்கதேசத்தில் உள்ள அகவுரா வரை ரயில் பாதை போடப்பட்டுள்ளது. இதில் 5 கிலோ மீட்டர் இந்தியாவிலும், 10 கிலோ மீட்டர் வங்கதேசத்திலும் ரயில் பாதை இருக்கும். 2 நாடுகளுக்கு பயணிகள் மற்றும் சரக்குகள் பரிமாற்றத்துக்காக இந்த ரயில் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் பாதை வடகிழக்கு மாநிலங்கள் குறிப்பாக திரிபுரா, அசாம், மிசோரம் ஆகியவை வழியாக கொல்கத்தா செல்லவும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் பாதைத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இன்று காணொலி காட்சி முறையில் தொடங்கி வைக்கவுள்ளனர்.
அகர்தலாவிலிருந்து டாக்கா வழியாக அகவுரா நகருக்கு இந்த ரயில் பாதை செல்கிறது. இதற்கான சோதனை ரயில் ஓட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ரயில் பாதையின் இடையே ஒரு பெரிய பாலமும், 3 சிறிய அளவிலான பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. தற்போது கொல்கத்தாவிலிருந்து அகர்தலாவுக்குச் செல்ல ரயிலில் 31 மணி நேரமாகிறது.
இந்த ரயில் பாதைத் திட்டம் முழுமையாக அமலுக்கு வந்தால் இந்த பயண நேரம் 10 மணி நேரமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில்வே திட்டத்துக்காக மத்திய ரயில்வே அமைச்சகம் இதுவரை 153 கோடியே 84 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரபு நாடுகள் கூட்டமைப்பு சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காஸா மக்களுக்கு அரபு நாடுகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் 22 அரபு நாடுகளின் சார்பாக ஜோர்டான் ஒரு வரைவு தீர்மானத்தை தயாரித்தது. அதில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், காஸா பகுதிக்குள் அத்தியாவசிய பொருள்கள் சேவைகளை தொடர்ந்து தங்கு தடையின்றி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், பாதுகாப்பு மற்றும் சிகிச்சை கோரும், சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மக்களையும், உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
193 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஐ.நா.அமைப்பில், 120 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. கனடா, இங்கிலாந்து, இத்தாலி, இந்தியா, ஜெர்மனி மற்றும் உக்ரைன் உள்பட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. பெரும்பாலான நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்ததால் போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றபட்டது. ஆனால் இந்த தீர்மானத்தை இஸ்ரேல் நிரகரித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் அக்டோபர் 7-ந் தேதி மோதல் தொடங்கியதில் இருந்து இதுவரை ஏறத்தாழ 8 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். வான்வழி தாக்குதலைத் தொடர்ந்து தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் விரைவுப்படுத்தி இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தத்தால் மத்திய கிழக்குப் பகுதியில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
இதையும் படிக்க | தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாசின் வான்படை தளபதி உயிரிழப்பு..!