அரபி கடலில் கவிழ்ந்த பாகிஸ்தான் படகுகள்!

அரபிக்  கடலில் பாகிஸ்தானிய படகுகள் நீரில் மூழ்கி காணாமல் போன மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

அரபி கடலில் கவிழ்ந்த பாகிஸ்தான் படகுகள்!

பாகிஸ்தான் சிந்த் மாகாணத்தில் அரபி கடலில் அல் சித்திக் மற்றும் அல் பாஹ்ரியா என்ற இரு மீன்பிடி படகுகள் சென்று கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.இதனுடன் சேர்ந்து 3 படகுகள் கடலில் திடீரென தட்டா கடலோர பகுதியில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் பாதுகாப்பு வீரர்கள் இதுவரை 25 மீனவர்களை மீட்டு கரை சேர்த்துள்ளதாக கூறுகின்றனர்.மீதமுள்ள 8 மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்தப்பகுதியில் வீசிய கடுமையான காற்றின் காரணமாக சுமை தாங்காமல் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனை தொடர்ந்து பாகிஸ்தான் கடற்ப்டையினரும் சேர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.