பென்சில்வேனியா ஐஸ் ஹாக்கி - பொம்மைகளை வீசியெறிந்து ரசிகர்கள் ஆரவாரம்

ஐஸ் ஹாக்கி போட்டியின்போது அரங்கத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் ஆயிரக்கணக்கான 'டெடி பியர்' பொம்மைகளை வீசியெறிந்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

பென்சில்வேனியா ஐஸ் ஹாக்கி - பொம்மைகளை வீசியெறிந்து ரசிகர்கள் ஆரவாரம்

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற ஐஸ் ஹாக்கி போட்டியின்போது அரங்கத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் ஆயிரக்கணக்கான 'டெடி பியர்' பொம்மைகளை வீசியெறிந்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் தொடர்ச்சியாக நடைபெறும் ஐஸ் ஹாக்கி போட்டியில், உள்ளூர் அணி முதல் கோல் அடிக்கும் போது ரசிகர்கள் பொம்மைகளை வீசியெறிவது வழக்கம்.

அந்த வகையில் உள்ளூர் அணி முதல் கோல் அடித்தபோது, ஆயிரக்கணக்கான பொம்மைகளை மைதானத்திற்குள் ரசிகர்கள் வீசியெறிந்தனர்.

இந்த பொம்மைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு மருத்துவமனைகள் மற்றும் குழந்தைகளுக்கான அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது..