ஆட்டு மந்தை போல் விமானத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட மக்கள்…  போட்டோ வைரல்!

 லாரிகளில் அடைத்து செல்லப்படும் ஆட்டு குட்டிகளை போல் ஆப்கன் மக்களை விமானத்தை அடைத்து கூட்டிச் செல்லும் அமெரிக்க விமானத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற நிலைக்கு ஆப்கன் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். விமானத்தின் இறக்கைகளில் தொத்திக் கொண்டாவது தப்பித்துக் கொள்ள ஆப்கன் மக்கள் தயாராக உள்ளனர். காபூலில் இருந்து கத்தார் செல்லும் அமெரிக்க போர் விமானம் ஒன்றில் லாரிகளில் அடைத்து செல்லப்படும் ஆட்டு குட்டிகளை போல், மக்களை அடைத்து அழைத்து செல்லப்படுவதன் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஒரே விமானத்தில் 640 ஆப்கன் நாட்டினர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

பார்ப்பதற்கு பொதுகூட்டத்தில் பங்கேற்றுள்ள மக்கள் கூட்டம் போல் தோன்றுகிறது இந்த புகைப்படம். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.