கடும் எச்சரிக்கை.. தடுப்பூசி செலுத்தாவிட்டால் சிறைத்தண்டனை...

கடும் எச்சரிக்கை.. தடுப்பூசி செலுத்தாவிட்டால் சிறைத்தண்டனை...

கொரோனாவுக்கு உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது இந்நிலையில் பிலிப்பைன்ஸில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அதிபர் எச்சரித்துள்ளர்.

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என பொது மக்களுக்கு பல்வேறு நாட்டு அரசுகள் வலியுறுத்தியது. இதனை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தி வரும் நிலையில், அந்நாட்டு மக்கள் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் அலட்சியம்  காட்டி வருகின்றனர்.

பிலிப்பைன்ஸில் இதுவரை 13,64,239 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு,  23,749 பேர்  கொரோனாவால்  உயிரிழந்துள்ளனர். 110 பில்லியன் மக்கள் தொகை கொண்ட பிலிப்பைன்ஸில் இந்த ஆண்டு 7 கோடி பேருக்காவது தடுப்பூசி போட்டு விட வேண்டும் என பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இலக்கு வகுத்துள்ளது.  

இந்நிலையில் அந்நாட்டு மக்கள் சிலர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டாமல் இருப்பதால் நாட்டுக்கு கேடு விளைவிக்கும் கொரோனா தொற்று தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் மேலும் நாட்டைவிட்டு வெளியேறிவிடுங்கள் என அந்நாட்டுமக்களுக்கு அதிபர் ரோட்ரிகோ எச்சரித்துள்ளர்.