பெண் பத்திரிகையாளரின் டீ ஷர்ட்டை கழற்ற சொன்ன காவல்துறை..! அதில் இருந்த வாசகம் தான் காரணம் !!

சிங்கப்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் kirsten han என்பவர், தான் அணிந்து இருந்த ஆடையில் இருந்த வாசகத்திற்காக அந்நாட்டு காவலர்கள் தன்னை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

பெண் பத்திரிகையாளரின் டீ ஷர்ட்டை கழற்ற சொன்ன காவல்துறை..! அதில் இருந்த வாசகம் தான் காரணம் !!

நேற்றைய தினம் kirsten han னும் அவருடைய நண்பர் rocky என்பவரும் மார்க்கெட் செல்வதற்காக bedok காவல் நிலையம் முன்பாக கடந்து சென்ற போது இரண்டு காவல் அதிகாரிகள் இவர்கள் சட்டவிரோத குற்றம் புரிந்ததாக கூறி விசாரணைக்காக அழைத்து உள்ளனர். அதற்கு காரணம் அவர்களின் tshirt ல்  எழுதப்பட்டு இருந்த "not in my name abolish the  deathpenality " என்ற வாசகம் தான். 

"தான்  விசாரணைக்காக காவல் நிலையத்திற்குள் செல்வதாகவும் சென்று வந்து விட்டு என்ன நடந்தது என்பதை விவரிக்குறேன்" என தனது ட்விட்டர்  பக்கத்தில் பதிவிட்ட kirsten han தனது அனைத்து சமூக வலைதள பக்கங்களில் இருந்தும் வெளியேறி இருக்கிறார்.

விசாரணைக்கு அழைத்துச்சென்ற காவலர்கள் அவர்களது டீ ஷர்ட் ஐ உடனே கழட்டி தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி உள்ளார். டீ ஷர்ட் ல் குறிப்பிடப்பட்டு இருந்த அந்த வாசகம் மரணதண்டனைக்கு எதிரானது என்பதால் அதை குற்றம் எனக் கூறிய காவலர்கள் அந்த டீ ஷர்ட் ஐ கழற்ற வற்புறுத்தியதால், இவர்களுக்காக மார்க்கெட்டில் காத்து இருந்த நண்பரிடம் கூறி வேறு ஒரு டீ ஷர்ட் வாங்கி வர செய்து உள்ளனர். அதில் ஒரு கருப்பு நிற டீ ஷர்ட்டில் sport என்ற வார்த்தையும், மற்றொரு கிரே நிற டீ ஷர்ட் ல் fruit என்ற வார்த்தையும் இருந்துள்ளது. அந்த டீ ஷர்ட் ஐ அணிந்து கொண்டு, அவர்கள் அணிந்து இருந்த டீ ஷர்ட் ஐ காவலர்களிடம் ஒப்படைத்து உள்ளார். 

மேலும் அவர்கள்  kirsten han இன் செல் போனை பறித்ததோடு, அவர் வெளியேறி இருந்த அனைத்து சமூக வலைத்தளங்களின் password ஐயும்  தர சொல்லி கேட்டு உள்ளனர். ஆனால் அது தன்னுடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் தனிப்பட்ட விஷயங்களை பாதுகாப்பதில் பிரச்னை ஏற்படும் என்பதாலும் அதை தனக்கு கொடுக்க விருப்பம் இல்லை என்பதாலும் அதை தர மறுத்துள்ளார்  kirsten han . இதற்காக அவருக்கு 5000 டாலர் அபராதம் அலல்து 6 மாத சிறை அல்லது இரண்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக குறைபாடு உள்ளது. 

ஒரு வேலை எனது நண்பர் இல்லை என்றால் என்னால் வேறு டீ ஷர்ட் வாங்க முடியவில்லை என்றால் என்ன செய்து இருப்பீர்கள்? என் நிலை என்ன? என காவலர்களிடம்  kirsten han கேட்டதற்கு, அது உங்களின் பிரச்னை, நீங்கள் எங்கிருந்தாவது டீ ஷர்ட் ஐ வரவைத்து இருக்க வேண்டும் என கூறி உள்ளனர். 

அந்த டீ ஷர்ட் உடன் தானும் தனது நண்பர்களும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள கிரிஸ்டன், சிங்கப்பூரில் இது ஒரு மிக சாதாரணமான நாள் எனக் குறிப்பிட்டு உள்ள  kirsten han சிங்கப்பூர் காவல் துறையினர் கொடுத்துள்ள ஒப்புகை சீட்டையும் பகிர்ந்துள்ளார். kirsten han பதிவிட அனைத்து  ட்விட்டர் பதிவுகளும் வேகமாக பகிரப்பட்டு வரும்  நிலையில், ஒரு பத்திரிகையாளருக்கே இந்த நிலைமையா என சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.