ரயிலில் துணிச்சலாக துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு...!

அமெரிக்காவில் ரயிலில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

ரயிலில் துணிச்சலாக துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு...!

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள முனி ஃபாரஸ்ட் ஹில் ரயில் நிலையத்தில், ரயிலுக்குள் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்த போது ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்ததாகவும், மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சான் பிரான்சிஸ்கோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அங்கிருந்து தப்பிச்சென்றதாக போலீசார் கூறுகின்றனர்.