உலக சுகாதார அமைப்பின் கமிட்டி பி தலைவராக ராஜேஷ் பூஷன் தேர்வு..!

உலக சுகாதார அமைப்பின் கமிட்டி பி தலைவராக ராஜேஷ் பூஷன் தேர்வு..!

உலக சுகாதார அமைப்பின் கமிட்டி பி தலைவராக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

75-வது உலக சுகாதார அமைப்பின் மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டத்தில், உலக தலைவர்கள் பலர் கலந்து கொண்டு சுகாதாரம் சார்ந்த விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததோடு, நாடுகளின் சுகாதாரத்தை பேணி காக்க உதவியவர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், உலக சுகாதார அமைப்பின் கமிட்டி பி தலைவராக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.