பதற்றமான சூழலில் இலங்கையின் அதிபராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க..!
அதிபர் மாளிகை முன்பு போராட்டக்காரர்கள் மீண்டும் குவியத் தொடங்கியிருப்பதால் மீண்டும் பதற்றம்..!

கடும் நெருக்கடியான சூழலில் இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவியேற்றார்.
புதிய அதிபருக்கான தேர்தல்:
இலங்கையில் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக, கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து, புதிய அதிபருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், இடைக்கால அதிபரான ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட 3 பேர் போட்டியிட்டனர்.
ரணில் விக்ரமசிங்கே வெற்றி:
நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் வாக்குப்பதிவு தொடங்கியதும் உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனை தொடர்ந்து, நேற்றே வாக்குகள் எண்ணிப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் மொத்தம் 223 வாக்குகளில் 4 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், செல்லுபடியான 219 வாக்குகளில் இடைக்கால அதிபர் விக்ரமிசிங் சிங்கே, 134 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
மீண்டும் பதட்டமான சூழல்:
இதனை தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று காலை ரணில் விக்ரமசிங்கே அதிபராக பதவியேற்றார். இதனிடையே, ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகை முன்பு போராட்டக்காரர்கள் மீண்டும் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் இலங்கையில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.