மது அருந்தியதற்காக பணியிலிருந்து நீக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.5.5 லட்சம் இழப்பீடு ...

பணிக்கு வருவதற்கு முன், மது அருந்தியதற்காக பெண் தொழிலாளி ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஐந்தரை லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தீர்ப்பாயம் உத்தரவிட்ட ருசிகர சம்பவம் ஸ்காட்லாந்தில் நடந்துள்ளது.

மது அருந்தியதற்காக பணியிலிருந்து நீக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.5.5 லட்சம் இழப்பீடு ...

 எடின்பர்க்கில் உள்ள கடல்சார் உணவுகளை பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை பார்த்த பெண் ஒருவர், சம்பவத்தன்று  பணிக்கு வந்துள்ளார். மேலும் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அவர் போதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மன்னிப்பு கோரியும், நிறுவனம் அவரை  பணியிலிருந்து நீக்கியது. இதனை எதிர்த்து பெண் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதில் பெண்ணுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி, அவர் நியாயமற்ற முறையில் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மது அருந்திய பின் 9 மணிநேரம் கழித்துதான் அவர் பணிக்கு வந்துள்ளார் எனவும் நீதிபதி கூறினார். மேலும் இப்பெண்ணின் செயலுக்கும், இரவு மது அருந்திவிட்டு காலை பணிக்கு வரும் நபர்களின் செயலுக்கும் வித்தியாசமில்லை என கருத்து கூறி  வழக்கை முடித்து வைத்தார்.