உக்ரைன் நகரங்கள் மீது குண்டு மழை பொழியும் ரஷ்யா... 198 பொதுமக்கள் பலியான சோகம்!!

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 198 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

உக்ரைன் நகரங்கள் மீது குண்டு மழை பொழியும் ரஷ்யா... 198 பொதுமக்கள் பலியான சோகம்!!

நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, அந்நாடு மீது கடந்த வியாழக்கிழமை போர் தொடுத்தது.

3 நாட்களாக உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து வரும் ரஷியா, தலைநகர் கீவ் நகரையும் நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. உக்ரைன் படையினரும் கடும் சவால் அளிப்பதால் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தீவிரம் அடைந்துள்ளது.

இந்நிலையில், ரஷிய தாக்குதலில் உக்ரைனில் பொதுமக்கள் 198 பேர் பலியாகியுள்ளதாகவும், ஆயிரம் பேர் காயம் அடைந்து இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் விக்டர் லியாஸ்கோ தெரிவித்துள்ளார். இதில், 3 பேர் சிறுவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உக்ரைன் மீதான தாக்குதலின் போது ரஷியப் படையில் சுமார் 3 ஆயிரத்து 500 படை வீரர்கள், 14 விமானங்கள், 8 ஹெலிகாப்டர்கள், 100க்கும் மேற்பட்ட டாங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.