சொந்த நாட்டின் மீது படையெடுக்க திட்டம் தீட்டிய ரஷ்யா.....

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக சொந்த நாட்டினர் மீது படையெடுக்க திட்ட மிட்டதாக அமெரிக்க அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

சொந்த நாட்டின் மீது படையெடுக்க திட்டம் தீட்டிய ரஷ்யா.....

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சனைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.இதனிடையில் உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014 ஆம் ஆண்டில் ரஷ்யா கைப்பற்றியதாக கூறப்பட்டது.இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையில் மோதல் அதிக அளவில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.அமெரிக்கா ஆனது உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வந்துள்ளது.

இதனிடையில் கடந்த நவம்பர் மாதம் முதக் ரஷியா உக்ரைனின் எல்லைப்பகுதியில் படைகளை குவித்து வருகிறது.இதில் ஒரு லட்சத்துக்கும் மேலான வீரர்களையும் போருக்கான கருவிகளையும் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.இந்த காரணத்தினால் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.உக்ரைன் மீது தாக்குதலில் ஈடுபட்டால் அமெரிக்கா அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் என தெரிவித்துள்ளது.

இதனால் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக சொந்த நாட்டின் மீது தாக்குதல் செய்ய ரஷ்யா திட்டமிட்டது.உக்ரைன் எல்லையில் மால்டோவா பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ரஷிய பாதுகாப்பு படையினர் மீது ரஷிய சிறப்பு படையினர் தாக்குதல் நடத்த உள்ளனர். இந்த தாக்குதலை உக்ரைன் தான் நடத்தியது என உக்ரைன் மீது ரஷியா குற்றஞ்சாட்ட உள்ளது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து உக்ரைன் மீது ரஷியா படையெடுக்க உள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

சொந்தநாட்டு ராணுவத்தினர் மீதே தாக்குதல் அதை உக்ரைன் தான் நிகழ்த்தியது என பொய்யான தாக்குதல் குற்றச்சாட்டை ரஷியா செய்ய உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ள தகவலை ரஷியா முழுவதும் மறுத்துள்ளது.