தீவிரமடையும் ரஷ்யா- உக்ரைன் போர் : செர்னிஹிவ் நகரத்தில் ரஷ்யா நடத்திய வான்தாக்குதல் !!

உக்ரைனின் செர்னிஹிவ் நகரத்தில் ரஷ்யா நடத்திய வான்தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளனர். இதில் அங்கிருந்த வெடிமருந்து கிடங்குகள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீவிரமடையும் ரஷ்யா- உக்ரைன் போர் : செர்னிஹிவ் நகரத்தில் ரஷ்யா நடத்திய வான்தாக்குதல் !!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் செர்னிஹிவ் நகர பகுதியில் ஒரே இரவில் ரஷிய படைகள் நடத்திய வான்தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தகவல்களை உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அங்கிருந்த 2 வெடிமருந்து கிடங்குகளை தங்கள் படைகள் தாக்கி அழித்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. 

மேலும் கார்கிவ் பகுதியில் உக்ரைனின் எஸ்-300 வான்பாதுகாப்பு ஏவுகணை அமைப்பையும், ஒடேசா நகருக்கு அருகில் உள்ள ரேடார் நிலையத்தையும் ரஷியா அழித்ததாக அதன் ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்தார். படையெடுப்பின் முதல் நாளில் ரஷியாவால் வீழ்த்தப்பட்ட பாம்பு தீவின் அருகே உக்ரைனின் டிரோனை வீழ்த்தியதாகவும் ரஷியா கூறியுள்ளது.