உக்ரைன் மீது போர் தொடுத்தால்  பொருளாதார தடை : ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால்  ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்படக் கூடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கவலை தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீது போர் தொடுத்தால்  பொருளாதார தடை : ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!!

உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்யா தீவிரம் காட்டு வருகிறது. இதற்கென மேற்கத்திய நாடுகளின் எல்லைகளில் படைகளை குவித்து, ரஷ்யா  தீவிர போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக, நேட்டோ படைகளும் படைகளை குவித்து வருகின்றன. இதனால் எந்நேரமும் போர் மூழும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், வளர்ந்து வரும் நட்பு நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன.  

இந்த நிலையில் அமெரிக்காவில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு உறுதியானால், உலகம் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்தார். அதுமட்டுமல்லாது, இதற்கு காரணமாகும் ரஷ்யா மீது நேரடி பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும், இது 2014ம் ஆண்டு விதிக்கப்பட்ட பொருளாதார தடையை காட்டிலும் மிக மோசமாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.