அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடை!!... ரஷ்ய அதிபர் புதின் அதிரடி முடிவு

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்க ரஷ்யா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடை!!... ரஷ்ய அதிபர் புதின் அதிரடி முடிவு

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை, பல்வேறு பொருளாதாரத் தடைகளை அடுத்தடுத்து விதித்து வருகின்றன. ஆனால், அதற்கெல்லாம் கலங்காமல் உக்ரைன் மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளார் ரஷ்ய அதிபர் புதின். 

அத்துடன் மட்டுமல்லாமல் தடை போட்ட நாடுகளுக்கெல்லாம் பதில் தடை போட்டு வருகிறார். முதல்கட்டமாக மேற்குலக நாடுகளின் விமானங்களுக்கு ரஷ்ய வான்வெளியில் தடை விதித்துள்ளார்.

தற்போது மேற்குலக நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் புதின் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. உலகிலேயே மிக அதிக கனிம வளங்களைக் கொண்ட ரஷ்யாவிடமிருந்துதான்  இயற்கை எரிவாயு, உணவுப் பொருட்கள் மற்றும் உலோகப் பொருட்களை பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் நம்பியுள்ளன. 

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தாக்குதலுக்கு முன்பே அனைத்திற்கும் அவர் தயார் ஆகி விட்டதாக கூறப்படுகிறது.அதனால்தான் ரஷ்ய அதிபரின் பதிலடிகள் அனைத்தும் அதிரடியாக உள்ளன.