காதலியுடன் தூங்கி கொண்டிருந்த விஞ்ஞானி சுட்டுக்கொலை!
தனது காதலியை ஆசையாக பார்க்க சென்ற விஞ்ஞானிக்கு நேர்ந்த துயர சம்பவம்.

பிரித்தானியாவை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தனது காதலியுடன் உறங்கி கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்க மாகாணமான ஜார்ஜியா தலைநகரின் அட்லாண்டாவில் தனது காதலியை பார்க்க சென்றதாக சொல்லப்படுகிறது.இவருக்கு வயது 31 பிரிட்டிஷ் வானியல் இயற்பியலாளர் ஆன இவர் தனது காதலியுடன் தூங்கி கொண்டிருந்த போது தவறுதலாக வந்த தோட்டா தலையில் தாக்கப்பட்டத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இங்கிலாந்தின் சர்ரே கவுண்டியில் உள்ள செர்ட்ஸியைச் சேர்ந்த டாக்டர் மேத்யூ வில்சனான இவர் தனது காதலியை பார்க்க அமெரிக்கா சென்ற நிலையில் அவரது படுக்கையறையை நோக்கியபடி சுவர் வழியாக துப்பாக்கி தோட்டா ஒன்று பாய்ந்தது. இந்த தோட்டாவனது சரியாக அவரது தலையை குறிவைத்து தாக்கியது போல பாய்ந்துள்ளது. இதில் அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும் வில்சன் வேண்டுமென்றே குறிவைத்து தாக்கப்பட்டதாக தெரியப்படவில்லை என போலீசார் தெரிவிக்கையில் பக்கத்து அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ஒரு குழுவில் பல தனிநபர்கள் சேர்ந்து பொறுப்பற்ற முறையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
துப்பாக்கியால் சுடப்பட்ட அந்த தோட்டாவனது 800 அடி தூரம் பயணித்து காட்டு மரங்களை கடந்து பின்னர் ஒரு சுவற்றையும் துளைத்து இறுதியில் வில்சனின் தலையில் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சார்ஜெண்ட் ஜேக்கப் கிஸ்ஸல் இது ஒரு அறிவற்ற செயலாக உள்ளது இதனால் ஒரு அப்பாவி பலியானதாக தெரிவித்த அவர் தனது காதலியை பார்ப்பதற்காக இங்கிலாந்தில் இருந்து இங்கு வந்து மரணமடைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இது குறித்து சரியான தகவல்கள் கிடைக்கப்படாத நிலையில் பொதுமக்கள் இந்த துயர சம்பவத்தை கருத்தில் கொண்டு ஏதேனும் தகவல்கள் இருப்பின் அதனை தெரிவித்தால் உதவியாக இருக்கும் என போலீசார் தரப்பில் கூறியுள்ளனர்.