இலங்கையில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு..! பொதுபோக்குவரத்து நம்பியுள்ள மக்கள் கடும் அவதி..!

இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1,500க்கு எரிபொருள் விற்பனை..!

இலங்கையில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு..! பொதுபோக்குவரத்து நம்பியுள்ள மக்கள் கடும் அவதி..!

இலங்கையில் நிலவி வரும் கடும் எரிபொருள் நெருக்கடியால் தனியார் போக்குவரத்தை நம்பியுள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அதன் எதிரொலியாக கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க இலங்கை பெட்ரோலிய நிறுவனம் அத்தியாவசிய தேவை உள்ளவர்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்குவதாக புதிய தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, சுகாதார சேவைப் பிரிவினர், பொதுப் போக்குவரத்து பிரிவினர், ரயில்வே துறையினர் உள்ளிட்டோருக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது. 

வெறிச்சோடி காணப்படும் நகரங்கள்..

இதனால் தனியார் போக்குவரத்து சேவைகள் மூலம் அலுவலகம் உள்ளிட்ட அன்றாட பணிகளை மேற்கொள்பவர்களின் நிலைமை கவலைக்கிடமாகி உள்ளது. தலைநகர் கொழும்புவின் நகர மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் இன்றி, பொதுவாக வாகன நெரிசல் அதிகமாக காணப்படும் நகரங்களிலும் போக்குவரத்து எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.

எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்..

மேலும், லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப பெட்ரோல் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1,500-க்கும், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.2,500-க்கும், கார் உளிட்ட வாகனங்களுக்கு ரூ.7,000-க்கும் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இதற்கான டோக்கன்களை வாங்குவதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளதால் நாடு முழுவதும் முடங்கிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.