ஷியா முஸ்லிம்கள் எல்லா இடங்களிலும் குறிவைப்போம்: தலிபான்- ஐஎஸ் அமைப்புகள் இடையே வலுக்கும் மோதல்...

ஷியா முஸ்லிம்கள் எல்லா இடங்களிலும் குறிவைக்கப்படுவார்கள் என்றும் பாக்தாத் முதல் கோராசான் வரை இந்தத் தாக்குதல் தொடரும் என ஐஏஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஷியா முஸ்லிம்கள் எல்லா இடங்களிலும் குறிவைப்போம்: தலிபான்- ஐஎஸ் அமைப்புகள் இடையே வலுக்கும் மோதல்...

ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து அங்கு ஐஎஸ் அமைப்பிக்கும் தலிபான் அமைப்புக்கும் மோதல் போக்கு நிலவிவருகிறது. ஆப்கனில் குண்டுஸ் பகுதியில் மசூதி ஒன்றில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். கந்தஹார் பகுதியில் ஷியா மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 60-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த இரு குண்டுவெடிப்புகளுக்கும் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது.

 ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் முழுமையாக அகற்றப்படுவார்கள் என்று தலிபான்கள் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தன.இந்த நிலையில் ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக அறிக்கை ஒன்றை ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஷியா முஸ்லிம்கள் எங்கும் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் பாக்தாத் முதல் கோராசான் வரை இந்தத் தாக்குதல் தொடரும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.