இணைய சேவைக்காக - 53 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்!!

அதிகவேக இணைய சேவைக்காக 53 செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இணைய சேவைக்காக - 53 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்!!

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகம் முழுவது அதிவேக இணைய சேவையினை வழங்குவதற்காக ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 

இதற்காக 260 கிலோ எடையிலான செயற்கைக்கோள்களை தொடர்ச்சியாக விண்ணுக்கு அனுப்பி வருகிறது. இதன் மூலம் பல்வேறு கட்டங்களை அடிப்படியாக வைத்து இரண்டாயிரத்துக்கும் அதிகமான செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தி வருகிறது.  

இந்த நிலையில் தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேற்று மேலும் 53 செயற்கைக்கோள்களை பால்கன் 5 ராக்கெட்டின் மூலம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத்தளத்தில் விண்ணில் செலுத்தியிருக்கிறது.