தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 105 படகுகளை ஏலம் விட இலங்கை அரசு முடிவு!

105 படகுகளை ஏலத்தில் விடுவதாக இலங்கை முடிவெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 105 படகுகளை ஏலம் விட இலங்கை அரசு முடிவு!

தமிழக மீனவர்களிடமிருந்து இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 105 படகுகளை ஏலம் விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது அவர்களை தாக்குவதையும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை கடற்படை வாடிக்கையாக வைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி தமிழக மீனவர்களின் 105 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.  இந்நிலையில், தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 105 படகுகளை ஏலம் விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஏலம் நடைபெறும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.