போரில் திடீர் திருப்பம்.. நேட்டோ அமைப்பில் சேர "நோ" சொன்ன உக்ரைன் அதிபர்!!.. என்ன காரணம்?

ரஷ்யாவுக்கு எதிரான போரில் திடீர் திருப்பமாக, நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ள வலியுறுத்தப் போவதில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

போரில் திடீர் திருப்பம்.. நேட்டோ அமைப்பில் சேர "நோ" சொன்ன உக்ரைன் அதிபர்!!.. என்ன காரணம்?

14வது நாளாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் பல்முனை தாக்குதலை நடத்தி வருகின்றன. மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதால் இந்த நகரங்களில் வசித்த 20 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஷ்யாவின் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்றான நேட்டோ அமைப்பில் இணைவதை கைவிடுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். உக்ரைனை சேர்த்து கொள்ள நேட்டோ தயாராக இல்லை என்று நன்கு தெரிந்த பிறகு அந்த அமைப்பில் உறுப்பினராக தொடர்ந்து வலியுறுத்தப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் நிபந்தனையை உக்ரைன் ஏற்றுக் கொண்டதை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.