மின்னல் தாக்கி உயிர்பிழைத்த தொழிலாளி!!

மின்னல் தாக்கி இந்த மனிதர் எப்படி உயிர்பிழைத்தார் என்பது பலரது கேள்வியை எழுப்பும் வகையில் இந்த அதிசியக்கதக்க செயல் நிகழ்ந்துள்ளது.

மின்னல் தாக்கி உயிர்பிழைத்த தொழிலாளி!!

ஒரு மனிதனின் இறப்பு என்பது எவராலும் தெரிந்து கொள்ள முடியாத ஒன்றாகும்.அதே போன்று எந்த நேரத்திலும் ஒரு மனிதனுக்கு இறப்பு நேரிடக்கூடும்.இறப்பு வரை சென்று ஒரு மனிதன் இயல்பு நிலையை அடைவது எல்லாம் ஒரு சிலருக்கு அதிர்ஷ்ட வசமாக தான் நிகழும்,ஆனால் இவருக்கோ  நம்ப முடியாத அளவிற்கு ஒரு அதிசியம் நிகழ்ந்துள்ளது.

இந்தோனேசியாவை சேர்ந்த ஜகார்த்தா நகரின் வடகிழக்கு பகுதியில் கனரக இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனத்தில் மின்னல் தாக்கிய நபர் பணிபுரிந்து வந்துள்ளார்.இவருக்கு வயது 35 என சொல்லப்படுகிறது.கடந்த் வாரம் இடி மின்னலுடன் கூடிய பலத்த் மழை பெய்துள்ளது.

பணியை முடித்து விட்டு திரும்புகையில் பலத்த மழை பெய்த நிலையில் எவ்விடத்திலும் ஒதுங்கி நிற்காத இவர் குடையை பிடித்துக் கொண்டு நடந்துள்ளார்.அவ்வப்போது ஏற்பட்ட மின்னல் அவரை தாக்கியுள்ளது.இதில் இவர்  உடலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் தரையில் விழுந்துள்ளார். அவரை கண்ட அக்கம் பக்கதினர் விரைந்து சென்று பார்த்ததில் உயிர் இருந்ததை கண்டு உதவ சென்றவர்கள் அதிர்ச்சியுற்றனர்.

உடல் முழுவதும் தீகாயங்களோடு காணப்பட்ட அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.சிகிச்சைக்குபின் தற்போது அவர் பூரண குணமடைந்து வீட்டில் இருப்பதாக தெரிவித்தனர்.மேலும் இது குறித்து மின்னல் தாக்கி பனை மரம் முற்றிலுமாக கருகிய சம்பவம் பற்றி எல்லாம் பார்த்திருப்போம் இப்படி மரமே முழுமையாக சாம்பலான நிலைக்கு மத்தியில் மின்னல் தாக்கிய ஒரு நபர் உயிர்பிழைத்த சம்பவம் அதிசியமாக பார்க்கப்படுகிறது.கடந்த வாரம் மின்னல் தாக்கிய இச்சம்பவத்தின் வீடியோ ஆனது தற்போது ஊடங்களில் வெளியாகி மக்களின் மத்தியில் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது.

வெளியான அந்நபரின் மின்னல் தாக்கிய வீடியோவில் அவர் குடை பிடித்து சென்றதும் மின்னல் தாக்கியதும் கடும் தீப்பொறிகள் பறப்பதும் அதில் பதிவாகியுள்ளது.மேலும் தொழிலாளி கைகளில் வாக்கி டாக்கி இருந்ததாகவும் அதுவே மின்னலை ஈர்த்து இருக்கலாம் என பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் வீடியோ விற்கு கீழ் இந்த மின்னல் தாக்கிய நபர் 100 வயது வரை வாழ வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.