அமெரிக்காவில் குரங்கம்மை நோய் பாதிப்பு...

கொரோனா தாக்கத்துக்கு பிறகு மத்திய அமெரிக்காவில் ஒருவருக்கு முதன் முறையாக குரங்கம்மை நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் குரங்கம்மை நோய் பாதிப்பு...

அமெரிக்காவில் தற்போது கொரோனா மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் ஒருவருக்கு குரங்கம்மை நோய் பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டல்லாஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்நபர் சமீபத்தில் நைஜீரியாவிலிருந்து அமெரிக்காவிற்கு பயணம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்படுள்ளது. பெரியம்மை போன்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்ததே இந்த குரங்கம்மை நோய் என்றும் இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அமெரிக்க சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.