தலிபான்களுடன் பேச்சுவார்த்தை... இந்தியாவின் உதவியை நாடும் ஆப்கானிஸ்தான்...

தலிபான் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஆப்கானிஸ்தான் இந்திய இராணுவத்தின் உதவியை நாடும் என்று, இந்தியாவுக்கான ஆப்கன் தூதர் தெரிவித்துள்ளார்.

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை... இந்தியாவின் உதவியை நாடும் ஆப்கானிஸ்தான்...

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதற்கிடையில், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், தலிபான் அமைப்பு மற்றும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெறும் சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், ஆப்கானிஸ்தான் அரசாங்கம் எதிர்காலத்தில் இந்தியாவின் இராணுவ உதவியை நாடலாம் என்று இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஃபரித் மமுண்ட்சே தெரிவித்துள்ளார்.  

ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கூறியுள்ள அவர், நாட்டின் மூன்றில் ஒரு பகுதியினர் தலிபானுடன் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா அளிக்கும் உதவியானது இராணுவத் துருப்புக்களை ஆப்கனுக்கு அனுப்புவதாக அல்லாமல், பயிற்சி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு ஆகியவற்றில் இந்தியா உதவி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.