யேமனில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மீலாது...

நேற்று மீலாதுநபியை முன்னிட்டி, யேமனில் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

யேமனில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மீலாது...

இஸ்லாமிய மதத்தின் முகமது நபிகளின் பிறந்தநாளை ஒட்டி, மீலாது நபி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி, பெரும்பாலும் இஸ்லாமியர்கள் வசிக்கும் ஏமனில் நேற்று பெரிதாகக் கொண்டாடப்பட்டது.

மேலும் படிக்க | எனக்கா பேட்டி கொடுக்க மாட்ட? இப்போ பாரு...- ஈரானுக்கு தடைகளை விதித்த அமெரிக்கா!

ஏமன் தலைநகர் சனாவில் மீலாது நபியை பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு கொண்டாடினர். பெரும்பாலும் ஹவுதி ஆதரவாளர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சமீபக் காலங்களில், இஸ்லாமியர்களுக்கு எதிராக பல வகையான குற்றங்கள் உலகம் முழுவதும் நடந்து வரும் நிலையில், ஏமனில் நேற்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்கள் போட்டது பெரும் கவனத்தைப் பெற்றது.

மேலும் படிக்க | மேடையிலேயே முடியை வெட்டிய துருக்கி நாட்டின் பிரபல பாடகி .. என்ன காரணம்?