உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ துருப்புகளை எல்லையில் நிறுத்தியுள்ளதால் பதற்றம்...

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ துருப்புகளை எல்லையில் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ துருப்புகளை எல்லையில் நிறுத்தியுள்ளதால் பதற்றம்...

நேட்டோ' எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் விரும்புகிறது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த இணைப்பிற்கு ஆதரவு அளித்து வருகின்றன. இதனால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா, உக்ரைன் எல்லையில் ராணுவத்தை குவித்துள்ளது.

இதனால் எப்போது வேண்டுமானாலும் உக்ரைனுக்குள் ஊடுருவி ரஷ்யா போரிட கூடும் என கூறப்படுகிறது. உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா பல முறை எச்சரித்தும் அதனை சற்றும் பொருட்படுத்தாத ரஷ்யா உக்ரைன் எல்லையில் போர் பதற்ற சூழலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது 8 ஆயிரத்து 500 ராணுவ வீரர்கள் அடங்கிய துருப்பை உக்ரைன் எல்லையில் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.