வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனையால் பதற்றம்... ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம்...

வட கொரியா விவகாரம் தொடர்பாக, ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில், இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனையால் பதற்றம்... ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம்...

வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருவது உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் சென்று எதிரியின் இலக்கை தாக்கும் நவீன ஏவுகணை சோதனையை, வட கொரியா வெற்றிகரமாக நடத்தி உள்ளது.

வடகொரியாவின் மத்திய தீவு பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரைக்குச் செலுத்தி சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவ தளபதிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஒரே வாரத்தில் இரண்டு முறை வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஏவுகணை சோதனை குறித்து அமெரிக்காவும், தென்கொரியாவும் ஆய்வு செய்து வருகின்றன. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, சியோலுக்குச் சென்று தென்கொரிய பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்த ஏவுகணை சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏவுகணை சோதனை நடத்தி அண்டை நாடுகளுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் வடகொரியாவுக்கு, ஐ. நா. பாதுகாப்பு கவுன்சில் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பலனில்லை. இந்த நிலையில், வட கொரியா விவகாரம் குறித்து, ஐ. நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில், இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.