முடிவுக்கு வந்தது 30 மணிநேர தாக்குதல்...!!

சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஹயாத் ஹோட்டலில் தீவிரவாதிகள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். 

முடிவுக்கு வந்தது 30 மணிநேர தாக்குதல்...!!

வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமை முழுவதும் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தாக்குதல் நடந்தது.  இதில் கட்டிடம் பெரும் சேதமடைந்தது.  

30 மணிநேர தாக்குதலை தொடர்ந்து 21பேர் இறந்தனர் எனவும் 117 பேர் காயமடைந்தனர் எனவும் சோமாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.  தற்போது ஹயாத் ஹோட்டல் முழுவதுமாக மீட்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோட்டலில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் வெடிமருந்துகளை பயன்படுத்தியதாக தெரிகிறது. இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு படையினர் அறிக்கை:

முற்றுகை முழுவதுமாக முடிந்துவிட்டன எனவும் துப்பாக்கி ஏந்தியவர்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டனர் எனவும் அறிக்கையில் கூறியுள்ளனர்.  

துப்பாக்கி சத்தம், குண்டுவெடிப்புகளுக்கு நடுவில் வசிப்பது மிகவும் பயங்கரமானது எனவும் திகிலூட்டுவது எனவும் பாதுகாப்பு படையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

தாக்குதல் நடந்தபோது ஹோட்டலில் இருந்தவர்களின் உறவினர்கள் அவர்களுக்காக காத்திருக்கின்றனர்.

இதையும் படிக்க: மனிதனுக்கும் வால் இருந்ததா......????விஞ்ஞானிகள் தகவல்....!!!!