உலகிலேயே மகிழ்ச்சியான நாடு... வெளிநாட்டவரை அழைக்கிறது...

உலகிலேயே மகிழ்ச்சியான நாடாக கருதப்படும் பின்லாந்து அரசு, வெளிநாட்டவருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

உலகிலேயே மகிழ்ச்சியான நாடு... வெளிநாட்டவரை அழைக்கிறது...
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மிக சிறிய நாடான பின்லாந்து வளர்ச்சி அடைந்த நாடாக உள்ளது. இந்நாட்டில் அனைவருக்கும் சம உரிமை, பாலின பாகுபாடு இன்மை என்பதோடு மனிதர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறைவாகவே காணப்படுகிறது. 
 
இந்த நிலையில் நாட்டின் மக்கள்தொகையை 55 லட்சத்திலிருந்து உயர்த்த பின்லாந்து அரசு முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. அந்நாட்டின் குடிமக்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிமாக இருக்கும் நிலையில்,  ஆண்டுக்கு 30 ஆயிரம் பேரை குடியமர்த்தும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.
 
எனினும் அங்கு குடியேறுபவர்களில் பெரும்பாலானோர் அந்நாட்டின் மொழி, பழக்க வழக்கம், குளிர் வானிலை உள்ளிட்டவை காரணமாக வந்த வேகத்திலேயே சொந்த நாட்டிற்கு திரும்பி சென்று விடுகின்றனர்.