தேசிய கொடியை அவமதித்த அமேசான் நிறுவனம் மீது வழக்குபதிவு!

மின்னனு வணிக நிறுவனமான அமேசானில் இந்திய தேசியக்கொடி இடம் பெற்ற டி ஷர்ட்கள் காலணிகள் இடம்பெற்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய கொடியை அவமதித்த அமேசான் நிறுவனம் மீது வழக்குபதிவு!

பிரபல மின்னனு வணிக நிறுவனமான அமேசான் இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி இடம் பெற்றிருப்பது மூவர்ணக்கொடியினை அவமதிக்கும் விதமாக இருப்பதாக நிறுவனத்தினை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் இது குறித்து சமூக வலைத்தளங்களில் அமேசான் நிறுவனத்திற்கு எதிராக பலரும் கடுமையாக விமர்சித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து அமேசான் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மத்திய பிரதேச டிஜிபிக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தேசியக்கொடி சட்டத்தை மீறியதாக அமேசான் நிறுவனம் மீது எப்ஐஆர்  பதிவிடுமாறு மத்தியபிரதேச அரசின்  உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.