தொடங்கியது தலிபான்களின் அட்டகாசம்... சுதந்திர நாளில் துப்பாக்கிச்சூடு... 

ஆப்கானிஸ்தான் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது, தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

தொடங்கியது தலிபான்களின் அட்டகாசம்... சுதந்திர நாளில் துப்பாக்கிச்சூடு... 

ஆங்கிலேயர்களிடம் இருந்து கடந்த 1919-ம் ஆண்டு ஆகஸ்டு 19-ம் தேதி ஆப்கானிஸ்தான் விடுதலை பெற்றது. ஆப்கானிஸ்தானில் அசாதாபாத் என்ற இடத்தில் அந்நாட்டின் 102-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், அங்குள்ள மக்கள் மூவர்ண தேசியக் கொடியுடன் பேரணியாக சென்றுள்ளனர். அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  அப்போது ஆப்கானிஸ்தான் தேசியக் கொடியை அசைத்த மக்களைக் குறிவைத்து தலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

மக்கள் அலறியடித்து ஓடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் சிக்கினர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.  துப்பாக்கிச் சூட்டால் உயிரிழப்பு ஏற்பட்டதா அல்லது கூட்ட நெரிசலால் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு நடத்தப்பட்ட முதல் துப்பாக்கிச் சூடு இது என்பது குறிப்பிடத்தக்கது.