ஆப்கனில் பெண்கள் முகத்தை மறைக்க உத்தரவிட்ட தலிபன் அரசு :  நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்த ஆண் செய்தியாளர்கள் !!

ஆப்கானில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற தலிபான் அரசின் உத்தரவுக்கு ஆண் பத்திரிகையாளர்கள் நூதனமான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

ஆப்கனில் பெண்கள் முகத்தை மறைக்க உத்தரவிட்ட தலிபன் அரசு :  நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்த ஆண் செய்தியாளர்கள் !!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது உடலை முழுவதும் மூடக்கூடிய புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என தலிபான் அரசு அறிவித்துள்ளது.

தலிபான்களின் இந்த உத்தரவுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உள்நாட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பின. எனினும் ஆப்கானில் எதிர்ப்பை மீறி இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற தலிபான்களின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் பத்திரிகையாளர்களும் முகத்தை மூடி தொலைக்காட்சிகளில் தோன்றினர். முகக்கவசம் அல்லது துணியால் முகத்தை மறைத்தப்படி தொலைக்காட்சிகளில் தோன்றி தொகுத்து வழங்கினர்.