செயல்களின் மூலமே தலிபான்கள் மதிப்பிடப்படுவார்கள்... அமெரிக்க செய்தி தொடர்பாளர் கருத்து..

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அவர்களது செயல்களின் மூலம் மதிப்பிடப்படுவார்கள் என அமெரிக்கா வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

செயல்களின் மூலமே தலிபான்கள் மதிப்பிடப்படுவார்கள்... அமெரிக்க செய்தி தொடர்பாளர் கருத்து..

அமெரிக்கா படை வெளியேற்றத்திற்கு பிறகு முதல் முறையாக அமெரிக்கா தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் தலிபான் பிரதிநிதிகளுடன் அமெரிக்கா தூதுக் குழு பேச்சு நடத்தியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட பிற நாட்டு பிரஜைகளை சுமூகமாகவும் பத்திரமாகவும் வெளியேற்றுவது குறித்தும், சர்வதேச நாடுகளுடனான பயங்கரவாதம், பாதுகாப்பு, மற்றும் ஆப்கானில் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்தும், பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது தலிபான்கள் அவர்களின் வார்த்தையின் மூலம் அல்லாமல் செயல்களில் மூலமே மதிப்பிடப்படுவார்கள் எனவும் கூறினார்.