செனட் சபை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவிய கருக்கலைப்பு மசோதா...! எவ்வளவு கணக்கில் தெரியுமா?

கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா செனட் சபையில் தோல்வி அடைந்துள்ளது.

செனட் சபை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவிய கருக்கலைப்பு மசோதா...! எவ்வளவு கணக்கில் தெரியுமா?

அமெரிக்காவில் தாய் கருவுற்ற 6 மாதங்களுக்கு பிறகு கருக்கலைப்பு செய்ய தடை விதித்து கடந்தாண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து அமெரிக்காவில் போராட்டம் வெடித்த நிலையில், நூறு உறுப்பினர்கள் கொண்ட செனேட் சபையில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும், பெண்கள் சுகாதார பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்தநிலையில் இதுதொடர்பான வாக்கெடுப்பில், ஒரு ஜனநாயக கட்சி உறுப்பினர் மற்றும் குடியரசு கட்சியினர் என 51 பேர் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா தோல்வியடைந்தது. இதையடுத்து நவம்பரில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல் வெற்றி மூலம் மசோதாவை நிறைவேற்ற ஜனநாயக கட்சி திட்டமிட்டுள்ளது.