காதலியின் அம்மாவுக்கு கிட்னியை தானமாக கொடுத்த காதலன்..ஒரே மாதத்தில் காதலன் கைவிடப்பட்ட கொடூரம்...

காதலியின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்து காப்பாற்றிய காதலன்.

காதலியின் அம்மாவுக்கு கிட்னியை தானமாக கொடுத்த காதலன்..ஒரே மாதத்தில் காதலன் கைவிடப்பட்ட கொடூரம்...

காதலுக்கு கண் இல்லை என கூறி வரும் அனைவரின் மத்தியில் ஒரு நபர் காதலுகாக தனது சிறுநீரத்தை இழந்து தவித்து வருகிறார்.

மெக்சிகோவை சேர்ந்த நபர் ஒருவர் தனது காதலை நிரூபிக்கும் விதமாக செய்த காரியம் அவருக்கே ஆபத்தாக அமைந்துள்ளது. பஜா கலிஃபோர்னியா பகுதியை சேர்ந்தவரான உஜைல் மார்டினிஜ் என்ற ஆசிரியர் ஒருவர் தனது டிக்டாக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.அந்த விடீயோவில் அவர் தனது காதலியின் தாயாருக்கு ஒரு கிட்னியை தானமாக கொடுத்தேன்.ஆனால் அதனை சிறிதும் யோசிக்காமல் தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து அவர் தன்னுடைய காதலி தனது அம்மாவின் உடல்நிலை குறித்து கவலைக்கொண்டு இந்த  முடிவை எடுத்திருக்கலாம் என தெரியப்படுத்தினார்.மேலும் அவர் வெளியிட்ட பதிவானது பலரும் பார்த்து வைரலாகி வரும் நிலையில் அவர் மற்றொரு வீடியோ ஒன்றை பதிவிட்டு அதில் நான் எனது மனசங்கத்திற்காக தான் வீடியோ வெளியிட்டேன் ஆனால் அவை வைரலாகும் என்றெல்லாம் நினைக்கவில்லை எனவும் தனது காதலி மீது எனக்கு எவ்வித வெறுப்பும் கிடையாது என குறுப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவானது பல லட்சம் மக்கள் பார்த்து வரும் நிலையில் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர்.அவர்கள் தரும் ஆறுதல்கள் தன்னை தேற்றி  வருவதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.